நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் தனியார் தண்ணி லாரி உரிமையாளர்கள் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா,
தண்ணீரை உறிஞ்சி எடுப்பதற்கு இதுவரை 56 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 46 விண்ணப்பங்கள் லாரி உரிமையாளர்கள் அளித்த விண்ணப்பங்கள் ஆகும்.அவை அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. பரிசளித்த பின் முறையாக மனு அளித்து அவர்களுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நான்காவது நாளாக 4,500 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை. பள்ளிக்கரணை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான தனியார் தண்ணீர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கடந்த மே மாதம் அளித்த வாக்குறுதியை தமிழக அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை என்று லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.