Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரண்டாக அறுந்த தாலி…. திடீரென நடந்த விபரீதம்…. காவல்த்துறையினரின் தீவிர விசாரணை….!!

கருங்கல் அருகில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் கைதவிளாகம் பகுதியில் பிரிட்டோ பிரசாத்- பாத்திமா மேரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாத்திமா மேரி என்பவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாத்திமா மேரி ஸ்கூட்டரில் கருங்கல் பகுதிக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அதன்பின்  தாளையங்கோட்டை பகுதியில் மேரி சென்று கொண்டிருக்கும்போது அவரை மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்த மர்மநபர் பாத்திமா மேரியின் ஸ்கூட்டரை நெருங்கி அவரது கழுத்தில் கிடந்த 5¾ பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட பாத்திமா மேரி தனது தாலி சங்கிலியை கைகளால் பிடித்து கொண்டிருந்தார். இதனால் தாலி சங்கிலி இரண்டு துண்டாக அறுந்து 2¼  பவுன் மேரியிடமும் மீதமுள்ள 3½ பவுன் மர்ம நபரிடம் சிக்கி விட்டது. இதனையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்தில் மேரி புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |