Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நேரில் அழைப்பு விடுக்கவில்லை” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறவினர் ஒருவர் நேரில்வந்து  அழைப்பு விடுக்கத்தால்  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு  பாண்டிச் செல்வியின் உறவினர் ஒருவர் தனது வீட்டில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டு என தனது உறவினர்களை அனைவரும் நேரில் அழைத்துள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அவரது உறவினர் பாண்டி செல்வியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவில்லை. இதனால் பாண்டிச்செல்வி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.

இதனையடுத்து பாண்டிச்செல்வியின் கணவரான சீனிவாசன் அவருக்கு சமாதானம் கூறியுள்ளார். ஆனாலும் அந்த சமாதானத்தை ஏற்க முடியாமல் பாண்டிச் செல்வி மிகுந்த வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாண்டிச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாண்டிச் செல்வியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |