Categories
தேசிய செய்திகள்

2 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தற்போது இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய எஸ்இசி என்ற குழு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகள் கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலனை செய்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, மருந்துகளை குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

குழந்தைகளிடம் இரண்டு மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனை நல்ல உடல் நிலையில் உள்ள 525 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசிகள் தசைகளில் தான் செலுத்தப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூன் 1ம் தேதி பணிகள் தொடங்கும் என்றும் கோவாக்சின் உற்பத்தியை 70 கோடியாக உயர்த்த உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் ரச்சஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |