Categories
அரசியல் கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேர்தலில் முன்விரோதம்…. மோதிக்கொண்ட திமுக VS அதிமுக…. கடலூரில் பரபரப்பு …!!

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவிற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சூர்யா, சரண்ராஜ், சுபாஷ் ஆகிய 3 பேரை தாக்கி அவர்களின் வீடு, கடைகளை திமுகவினர் அடித்து உடைத்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |