Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: வங்கக்கடலில் உருவானது யாஸ் புயல்…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.

இந்த யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிசா இடையே மே 26-இல் யாஸ் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 540 கி.மீ தொலைவில் இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Categories

Tech |