Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு…. விரைவில் கொரோனா சிகிச்சை மையம்…. உத்தரவிட்டார் மாவட்ட கலெக்டர்….!!

தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி மற்றும் பொறையாறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழங்கும் சிகிச்சை, மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் ஆகியவற்றை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். மேலும் இரண்டு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர்களிடம் சிகிச்சை முறைகள், தேவையான அளவு மருந்துகள் உள்ளனவா? போன்றவற்றைக் குறித்து கேட்டறிந்துள்ளார்.

பின்னர் தடுப்பூசி போடும் பணியைகுறித்து அவர் ஆய்வு செய்தார். இதனையடுத்து தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் விரைவில் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன், பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், பொறையாறு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ அலுவலர் போன்றவர்கள் உடன் இருந்தனர்.

Categories

Tech |