Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல… கலைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பாறை மீது மோதிய விபத்தில் மேள கலைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷ்வந்தியம் பகுதியில் ஜான்பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய ஜேம்ஸ் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் சவுரி அப்பன் என்பவரது மகனான அந்தோனி ஆரோக்கிய ஜான்சன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மேளக் கலைஞர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்களான ஆரோக்கிய ஜேம்ஸும், அந்தோணியும் இணைந்து கூனியூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மேளம் வாசிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதனை அடுத்து விழா முடிந்த பிறகு கூனியூர் கிராமத்தில் வசிக்கும் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இரண்டு மேள கலைஞர்களும் ரிஷிவந்தியம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் கூனியூர் ஏரிக்கரை வளைவில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் உள்ள பாறை மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் அந்தோணிக்கும், ஆரோக்கிய ஜேம்ஸ்க்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சதீஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார்.

இதனை அடுத்து படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும்  வழியிலேயே ஆரோக்கிய ஜேம்ஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தோணிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக  உயிரிழந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |