அரசு அனுமதி அளித்த போதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஏராளமான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக குவிந்தனர். ஆனால் தொட்டியம் கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, கடைகளை ஒரு நாள் மட்டும் திறப்பதற்கு அனுமதி அளித்த உடனே இப்பகுதியில் உள்ள ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகளை திறந்தால் மக்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் கடையை திறக்கவில்லை என கூறியுள்ளனர்.