Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலையா….? ஜிம்பாப்வே வீரரின் உருக்கமான பதிவு …!!!

ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு ஸ்பான்சர் வழங்க பூமா  நிறுவனம் தயாராக உள்ளது.

கடந்த 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் , கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி சிறந்து  காணப்பட்டது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மற்ற வீரர்களுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. குறிப்பாக  கேம்ப்பெல், பிளவர் சகோதரர்கள் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். அதோடு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா, , இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போதுள்ள நிலையில் ஜிம்பாப்வே அணி வலுவிழந்து காணப்படுகிறது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியமும் நிதியின்றி தவித்து வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் வீரரான ரியான் பர்ல், தான் விளையாட்டில் பயன்படுத்தும் ஷூவை , தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஒவ்வொரு விளையாட்டிற்கும் பிறகும் ,இந்த ஷூவை பசையால் ஒட்ட வைக்க முடியாது என்றும் நாங்கள் ஏதாவது ஸ்பான்சர் பெற வாய்ப்பு இருக்கின்றதா என்று ட்விட்டரில்  உருக்கமாக பதிவிட்டிருந்தார். இவருடைய இந்த பதிவு ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கே  இந்த நிலையா ? என்று அனைவரையும் கவலை கொள்ளும் வகையில் இருந்தது. இவருடைய பதிவிற்கு பூமா நிறுவனம் ஸ்பான்சர் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |