Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு நேரத்தில் காணாம போயிரும்” உரிமையாளர்களின் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப கொடுக்க வேண்டி உரிமையாளர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சுற்றித் திரிவதாக 227 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து உரிமையாளர்கள் கூறும் போது, காவல்துறையினர் இ-பதிவு முறையுடன் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்ததாகவும், ஊரடங்கு நேரத்தில் வாகனங்களின் உதிரிபாகங்கள் தவறி விட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்த உடன் வாகனங்களை ஒப்படைப்பதாக கூறிய பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |