Categories
மாநில செய்திகள்

ஓஹோ! இது தான் சொல்வதை செய்வதா? அறிவித்தது ரூ.8000, கொடுப்பது ரூ.5000…. ஜெயக்குமார் விமர்சனம்…!!!

தமிழகம் முழுவதும் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.500 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2017இல் ரூ.5000 என உயர்த்தி 1.63 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கினார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது ரூ.8000. ஆனால் தற்போது கொடுப்பதாக இருப்பது ரூ.5000 மட்டுமே. ஓஹோ இது தான் சொல்வது தான் செய்வோம்! என்பதா? என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் ஜெயலலிதா 2016 இல் இறந்த நிலையில், ஜெயக்குமார் 2017 இல் ஜெயலலிதா கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

Categories

Tech |