தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்கத் துறை ஊழியர்கள் தங்களுடைய அடையாள அட்டையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளும் இயங்கலாம். பால், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை வினியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் செல்லவும், பெட்ரோல் டீசல் பங்குகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.