Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் எதிராக லுக்-அவுட்-நோட்டீஸ்” CBI ஆட்டம் தொடங்கியது….!!

ப.சிதம்பரம் தப்பி செல்லக் கூடாது என்று லுக்-அவுட்-நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Image result for chidambaram cbi

மேலும் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமலாக்கத்துறையினர் சென்றனர். அவரை கைது செய்ய சென்றுள்ளதாகவே பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சற்றும் பின்வாங்க வில்லை ப.சிதம்பரம் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் அவரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு விசாரணைக்கு அழைக்க பட்டிருந்தது. மேலும் கடந்த 14 மணி நேரத்தில் 4 முறை ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விரைந்தனர்.

Image result for chidambaram cbi

மேலும் இந்த வழக்கு மேல்முறையீடு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில் ப.சிதம்பரத்தின் கைது வழக்கை தூரிதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே ப.சிதம்பரம் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி விடக் கூடாது என்று  அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் -அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நேற்று இந்த நடவடிக்கையை திட்டமிட்டு இருந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தற்போது செயல்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |