Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ் லுக்கில் முகேன் ராவ்… தெறிக்கவிடும் ‘வேலன்’ பட புதிய போஸ்டர்…!!!

பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ் நாடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவோடு டைட்டிலை வென்றார். இந்த  நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் இயக்குனர் கவின் இயக்கத்தில் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேலன். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்கை மேன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் வேலன் படத்தில் முகேன் ராவ்வின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |