தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சிறப்புகளும் அதிகரித்து வந்தது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மீண்டும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மே 12ஆம் தேதி 7,574 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது மே மாதம் 23ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 5,169 ஆக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் சென்னை மக்களுக்கு ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது.