தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா என்னும் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து #COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம். pic.twitter.com/kfvsoCpZph
— M.K.Stalin (@mkstalin) May 24, 2021