Categories
தேசிய செய்திகள்

யாஷ் புயல் எதிரொலி… 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து…!!!

யாஷ் புயலின் காரணமாக கிழக்கு ரயில்வே 25 ரயில்களின் சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி மாலையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த புயலின் காரணமாக கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் காரணமாக 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நியூ தின்சுகியா – தாம்பரம் சிறப்பு ரயில், தாம்பரம் – நியூ தின்சுகியா சிறப்பு ரயில், ஜார்கண்ட் – தாம்பரம் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல் – நியூ ஜல்பைசூரி போன்ற ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |