Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை கேட்டு தான் ஆகணும்…. ஒரே நாளில் குவிந்த பொதுமக்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு இன்று முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் நேற்று தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறாக நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து மொத்தம் 21 ஆயிரத்து 500 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |