Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டிங்களா…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்….!!

திருவாரூரில் ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக கடைவீதிகளில் குவிந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பிற்கு பிறகு வியாபாரிகள் தங்களது கடைகளை திறந்து வைத்து நேற்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக கடைவீதிகளில் குவிந்துள்ளனர். இதனை கண்காணிப்பதற்காக திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் கூட்டமாக நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு வெறிச்சோடி காணப்பட்ட கடைவீதிகளில் ஊரடங்கு காரணமாக நேற்று பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது.

Categories

Tech |