கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக நளின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த MLA-க்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதைதொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது ஆதரவு MLA-க்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரது அழைப்பை ஏற்று எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக நளின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.