மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலியாகி வருகின்றனர் என்று பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் பலரும் மத்திய அரசை சாடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பா சிதம்பரம் மத்திய அரசின் செயல்பாட்டால் மக்கள் பலியாகி வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 18-44 வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் டெல்லி, தெலுங்கானாவை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக் காட்டி மத்திய அரசு தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறையை மறுத்து வருகின்றது என குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு கிராமங்களில் தடுப்பூசி இல்லை என்று ஆய்வு கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
After Delhi and Telangana, Maharashtra has suspended vaccination of 18-44 years age group citing shortage of vaccines
Yet, the Union Home Minister/Ministry denies any shortage of vaccines!
— P. Chidambaram (@PChidambaram_IN) May 24, 2021