Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணீர் மல்க பேசிய நடிகர் கவுண்டமணி… வைரலாகும் பதிவு..!!

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர்.

அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்” என்று அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

https://twitter.com/itisGoundamani/status/1395999304074989568

Categories

Tech |