Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் சூரியனை சுற்றி ஒளிவட்டம்… வைரலாகும் புகைப்படம்…!!!

பெங்களூரில் இன்று சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தென்பட்டது. இது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்ததால் மக்கள் அதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பெங்களூரில் இன்று சூரியனை சுற்றி தென்பட்ட வட்டத்தை ஆங்கிலத்தில் ஹேலோ ரிங் என்று அழைப்பர். சூரிய வெளிச்சம் மேகங்களில் இருக்கும் சிறிய பழங்குடிகள் மேல் படுவதால் இப்படி காட்சியளிக்கும். இது மழை வருவதற்கான ஒரு அறிகுறி. இதை வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல. வானில் சூரியனை சுற்றி ஒரு வளையம் போடப்பட்டிருந்த அழகிய காட்சி மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சூரியனை சுற்றி வானவில் தோன்றினால் எப்படி இருக்குமோ? அதுபோன்று ஒரு அழகிய காட்சி காணப்பட்டது. குளிர் அதிகம் இருக்கக்கூடிய நாடுகளில் தான் இது போன்ற அதிசய நிகழ்வு தென்படும். ஆனால் பெங்களூரு மாநிலத்தில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. வளிமண்டலத்திலுள்ள பனி படிமங்கள் வழியாக சூரியன் அல்லது சந்திரன் ஒளி ஊடுருவிச் செல்லும் போது இதுபோல வட்டம் தோன்றும். இதனை 22 டிகிரி வட்டம் என்றும் அழைப்பார்கள்.

Categories

Tech |