Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு …2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்கும் பிசிசிஐ …!!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்க உள்ளதாக  பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோன வைரஸ் இரண்டாம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அத்துடன் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகின்றன .

இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் பிசிசிஐ , 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை  வழங்க உள்ளது.இதைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில், நாட்டிலுள்ள எல்லா   பகுதிகளுக்கும், தேவைப்படும் இடங்களுக்கு இதை வழங்க உள்ளது .

Categories

Tech |