Categories
மாநில செய்திகள்

பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்…!!

சென்னையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அப்பள்ளி அவரை பணி நீக்கம் செய்தது.

மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதை கண்டித்த பாமக ராமதாஸ் ” தாய் தந்தையை அடுத்து கடவுளாக மதிக்க வேண்டிய ஆசிரியர்கள் அதற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |