Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை பார்ப்பீர்கள் – கமலஹாசன் அதிரடி பேச்சு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன், பொதுச்செயலாளர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா உட்பட பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியுள்ளனர். இதனால் மக்கள் நீதி மைய கட்சியின் ஒட்டுமொத்த கூடாரமே காலியாகிவிட்டது.

இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்த நிலையில் அதற்கு அந்தக் கட்சியின் தலைவர் கமல் சவுக்கடி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மையத்தில் இருக்கும் தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றி பாடம் கற்க வேண்டும். கட்சியின் உள்கட்டமைப்பை தனிமனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி ஆடிய விளையாட்டுக்கள் இனி தொடராது. இனி உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |