Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியிருப்பு பகுதிக்குள்… புகுந்த சாரை பாம்பு… வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்பு துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தன்யாநகர் புதிய வீடு கட்டும் பணிகள் நடக்கும் இடத்தில் டைல்ஸ் கற்கள் வைத்திருக்கும் பெட்டியில் நல்ல பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனையடுத்து கட்டிட தொழிலாளர்கள் குடுத்த தகவலின்படி அங்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி அந்தோணிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் திருச்சுழி உள்ள அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அப்பகுதி மக்கள் திருச்சுழி தீயணைப்பு வீரர்களுக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த சாரை பாம்பு பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.

Categories

Tech |