கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகின்றது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களை பேசிய அவர் ஜூன் ஒன்றாம் தேதி சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக ஜூலை 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரையிலும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல்கட்ட தேர்வுகளில் பங்கேற்க இயலாத மாணவர்கள் இரண்டாம் கட்டத்தில் தேர்வுகளை எழுதி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.