Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா டீம்ல இவரு ரொம்ப டேஞ்சரான ஆளு”…! ‘நியூசிலாந்துக்கு இவரோட விக்கெட்டு தான் ரொம்ப முக்கியம்’…! நியூசிலாந்து பயிற்சியாளர் …!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி  இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் பொதுவான இடமாக இங்கிலாந்தில்  போட்டி நடந்தாலும், இங்கிலாந்து சூழ்நிலை ஸ்விங் பந்திற்கு சாதகமாக அமையும். குறிப்பாக நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்,ஜேமிசன், டிம் சவுத்தி  ஆகிய வீரர்கள் சிறப்பாக ஸ்விங் செய்ய கூடியவர்கள். எனவே இந்திய அணிக்கு இந்த போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். நியூசிலாந்து அணியின் பௌலிங் பயிற்சியாளரான ஜர்கென்சன்  கூறும்போது, இந்திய அணியில் விக்கெட் கீப்பர்  விளங்கும் , மிகவும் ஆபத்தானவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ” ரிஷப் பண்ட் தனியாளாக நின்று போட்டியை மாற்றக் கூடியவர். இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் கண்டுள்ளோம். இதனால் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ரிஷப் பண்டின்  விக்கெட்டை வீழ்த்த வேண்டும். அதோடு ரிஷப் பண்ட்  குவிக்கும் போது, நிதானத்துடன் செயல்பட்டு அவரை வீழ்த்த வேண்டும் . அவர் அதிரடியை கட்டுப்படுத்துவது கஷ்டமாகதான் இருக்கும் “, என்று கூறினார்.

Categories

Tech |