நான் ஓடி ஒளிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் இரத்து என்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் ப.சிதம்பரம் சார்பில் முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் நிலையில் முன்ஜாமீன் அளிக்க பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியமில்லை. எம்பியாக உள்ள எனது மீது கடந்த காலங்களில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
மத்திய அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருவதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு விஷயத்தில் யாரோ பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் வாய் மொழியாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தை வைத்து இந்த வழக்கு என் மீது புனையப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இந்த சம்பவத்துக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனது முன்ஜாமீனை ரத்து செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை எந்தெந்த நேரங்களில் சம்மன் அனுப்பியது, இதை எந்தெந்த தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்கம்கொடுக்கப்பட்டது உள்ளிட்ட முழுமையான விவரங்களையும் , விலாவாரியாக அவர் இந்த மனுவில் தனித்தனியாக கொடுத்துள்ளார்.இந்த நிலையில் ப.சிதம்பரம் தப்பி விடக் கூடாது என்று சிபிஐ தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.