பீகார் மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக 4ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை முதலில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதை பின்பு 25 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது: உணவகங்களில் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கும் சேவைக்கும், அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.