Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி  ரத்தானது ….! ஒருவகையில் இந்திய அணிக்கு சாதகம்தான் …!நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர்…!!!

கொரோனா  தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி  ரத்தானது , இந்திய அணிக்கு  சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரரான ரோஸ் டெய்லர் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் சவுத்தம்டன்  நகரில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது ,இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது,”  ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும், இந்திய வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. இந்த இறுதிப் போட்டியை பொறுத்தவரை, நியூசிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து  ஆடுகளத்தில் , இந்தப் போட்டிக்கு முன்பாக நாங்கள் இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளோம். நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்து தொடருக்காக இன்னும் தயார் படுத்திக்கொள்ளவில்லை “, என்று ரோஸ் டெய்லர் கூறியுள்ளார்.

Categories

Tech |