கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவிலான பணிக்குழு நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது “மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி இறக்கும் நபர்களின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது.
அந்த குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம் வசதி செய்து தரப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனை கவனிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பணி குழு அமைத்து குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுகின்றன. மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு குழந்தைகள் அலுவலகத்தின் பாதுகாப்பு தொலைபேசி எண் 0452-2642300 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் சைல்டு லைன் அமைப்பினரை 1098 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்” என அவர் கூறியுள்ளார்.