தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் மே-31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், முதல் தவணை ரூ.2000 பெறாதவர்கள் மேற்குறிப்பிட்ட நேரங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.