தமிழகத்தில் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் 6 சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேலும் நேற்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன்-15 வரை சிறப்பு ரயில்களை ரத்து செய்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவில்-கோவை, எழும்பூர்-திருச்சி, கோவை-மங்களூரு, சென்னை-பெங்களூரு, எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில்கள் ஜூன்-15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.