Categories
மாநில செய்திகள்

முழுஊரடங்கு: தமிழகத்தில் வங்கி ஊழியர்கள் – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வங்கி கிளைகளில் வர்த்தக நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை தொடரும். ஆனால் வங்கிக் கிளைகளில் ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |