Categories
தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸ் ஷாக்…. ”சிதம்பரம் மனு விசாரணை இல்லை”…. மாலை கைதாகிறார் …!!

ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்படாமல் விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா  முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த  இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில்  கோரிக்கை வைத்தார்.

Image result for p chidambaram

நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிப்பார் என்று நீதிபதி ரமணா தலைமை நீதிபதிக்கு மாற்றி பரிந்துரைத்தார்.  ஆனால் அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெற்று வருவதால் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன்  கோக்காய் தெரிவித்திருந்தார்.

Image result for supreme court

ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் நீதிபதி ரமணா அமர்வு முன்பு ப.சிதம்பரம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவில் பிழை இருந்ததால் அதை பட்டியலுக்கு கொண்டு செல்லாமல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து பட்டியலிடப்படாத மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று மீண்டும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் வழங்காததால் இன்று அவர் கைதாக இருக்கின்றார்.

Categories

Tech |