ஆவின் துறை மூலமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்துத் தர பணவுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு ரூ.85,000 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை பண உதவிகள் வழங்கப்படும். வைத்திருக்கும் கால்நடைகளுக்கேற்றார் போல் இந்த தொகையை வழங்குவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருந்தகங்கள் மற்றும் ஆவின் கிளை நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்தபின்பு, கால்நடை துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன் பின்னர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் துறை உதவி ஆய்வாளர் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு விவசாயிகளின் இருப்பிடத்திற்குச் சென்று கால்நடைகள் வளர்க்கிறார்களா, சொந்த இடம் உள்ளதா என ஆய்வு செய்வார்கள். இதில் தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் பணியார்களைக் கொண்டு கொட்டகை அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.