Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல கூடாது. அதனை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |