இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை நோய் வருகிறது.
இதையடுத்து மகாராஷ்டிர அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச கருப்பு பூஞ்சை சிகிச்சை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதனைப்போலவே மத்திய பிரதேச அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச கருப்பு பூஞ்சை பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.