Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பசியில் தவித்த ஊனமுற்றோர்… உணவு வழங்கிய காவல் துறையினர்… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவின்றி தவித்த ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்கு காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து உணவு வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியிலிருக்கும் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் உணவின்றி தவிப்பதாக  தன்னார்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் தன்னார்வலர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து உணவு தயார் செய்து பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களிலுள்ள முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் அனைவருக்கும் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளார். இதில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |