Categories
உலக செய்திகள்

விமானத்தில் வெடிகுண்டு வதந்தி.. அதன் பின் நேர்ந்த சம்பவம்.. ஐரோப்பிய நாடுகள் கண்டனம்..!!

பெலாரஸ் நாடு, பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்வதற்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Ryanair என்ற விமானம், ஏதென்ஸ் நகரிலிருந்து வில்னியஸிற்கு புறப்பட்டுள்ளது. அப்போது பெலாரஸ் அரசு, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியைக் கிளப்பி, மின்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கி விமானத்திலிருந்த Roman Protasevich என்ற 26 வயதான பத்திரிக்கையாளரை கைது செய்திருக்கிறது.

அதாவது இந்த பத்திரிக்கையாளர் பெலாரஸ் அரசை கடுமையாக விமர்சிப்பவர். இவர் அந்த விமானத்திலிருந்த பிற பயணிகளிடம் தான் மரணதண்டனையை ஏற்கப்போவதாக கூறியிருக்கிறார். அப்போது தான் விமானத்தை வேகமாக தரையிறக்கி, அவரை கைது செய்து இழுத்து சென்றுள்ளனர்.

இதற்கு, பெலாரஸ் அரசு பயங்கரவாத செயலை மேற்கொள்வதாக விமர்சனம் எழுந்ததோடு,  ஐரோப்பிய நாடுகள் பல கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |