இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப்- 2 படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படம் வருகிற ஜூலை 16-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கே.ஜி.எப்-2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கே.ஜி.எப்- 2 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.