Categories
தேசிய செய்திகள்

”கிரீச்” சத்தத்தோடு நின்ற ரயில்…! தெறித்து ஓடிய பயணிகள்…. அசாம் ரயில் நிலைய பரபரப்பு …!!

அசாமில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து 400-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் தெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்கு அம்மாநில அரசு கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயமாக்கியுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியிலிருந்து திப்ருகார் செல்லும் திவேக் அதிவேக ரயில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாகி ரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது அந்த ரயிலில் இருந்து வந்த 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்,  பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்ய முற்பட்டனர். திடீரென அவர்கள் பரிசோதனை மேற் கொள்ளாமல் அரக்கப்பரக்க ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |