Categories
உலக செய்திகள்

“பண மோசடி வழக்கு!”.. பிரபல கால்பந்து கூட்டமைப்பின் அலுவலர் மீது குற்றச்சாட்டு..!!

சுவிட்சர்லாந்து அரசு, பணமோசடியில் ஈடுபட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரல் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

Conmebol என்ற தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரலாக இருந்தவர் 79 வயதான Eduardo Deluca. இவர் மீது சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது, 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்திருக்கிறது. மேலும் 18,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் பின்பு அபராதத்தை உடனடியாக செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்தது. அதாவது Eduardo மீது லஞ்சமாக பணம் பெற்றது, மார்க்கெட்டிங் மற்றும் தொலைக்காட்சிக்கு உரிமங்கள் அளிப்பதற்கு சட்டவிரோதமாக பணம் வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் 2.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் Conmebol கால்பந்து கூட்டமைப்பிற்கு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊடகத்தில், அவர் 1.5 மில்லியன் பிராங்குகள் கால்பந்து கூட்டமைப்பிற்கு செலுத்திவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் சுவிட்சர்லாந்தில் பல வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்துள்ளார். அதனை வைத்து பண மோசடி செய்து வந்திருக்கிறார்.

Categories

Tech |