வேலை பார்த்து கொண்டிருக்கும் போது ரயில் மோதி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாண்டரகுண்டா கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதுணை ரயில் நிலையம் அருகே சிவப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற ரயில் சிவப்பா மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது.
இதனால் பலத்த காயமடைந்த சிவப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.