வேலூரில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் தினசரி ஏராளமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் மீது கருப்பு பூஞ்சை என்னும் புதிய நோய் தாக்குகிறது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றினால் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.