நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும் வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.
இந்த வழக்கை தடைவிதிக்க கோரியும் , எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.இன்று நீதிபதி ஆதிகேசவலு முன்பு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட பிறகு எந்தெந்த வழக்குகள் மாற்றப்பட்டது என்று கேட்ட நீதிபதி இந்த வழங்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு , வருமான வரித்துறை , தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
ஏற்கனவே நேற்று கார்த்திக் சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீனை இரத்து செய்யமுடியாமல் மறுப்பு தெரிவித்தது.தற்போது இந்த வழக்கின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அவரின் மகனின் கார்த்திக் சிதம்பரம் கோரிக்கையை நிராகரித்துள்ளது. அப்பாவை டெல்லியில் , மகனை சென்னையிலும் நீதி விரட்டி அடிக்கின்றது அல்லவா.