சென்னை கே.கே நகரில் #PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்த பள்ளிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அசோக் நகர் மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளனர். மாணவிகள் பாலியல் தொந்தரவு தருவதாக புகார் அளித்தும் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நிர்வாகத்தின் மீது சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.